(This is Manushyaputhiran’s poetry from Charu Nivedita’s blog with my translation of it below/ மனுஷ்ய புத்திரனின் புதிய கவிதைகள் – சாரு நிவேதிதாவின் வலைபதிவிலிருந்து, எனது மொழிப்பெயர்ப்பு கீழே)
எவ்வளவு
அந்தரமாக இருக்கிறேன்
என்று சொல்ல வரும்போதே
அவனுக்குக் குரல் உடைந்துவிடுகிறது
ஒரு முறையேனும்
இதை சரியாக
முழுமையாக
யாரிடமாவது
சொல்லிவிடவேண்டும் என்று
அவன் நினைக்காத நாள் இல்லை
தான் நின்றுகொண்டிருக்கும்
தரை
எந்நேரமும் விலகக் காத்திருக்கும்
தூக்கு மேடையின் பலகை என்று
அவன் உருவகித்துக்கொள்ளும்போது
அவனது கண்கள் தளும்பி விடுகின்றன
எந்த நிச்சயமும் அற்று
சந்திக்கப்போகும் மனிதர்கள்
எந்த உத்தரவாதமும் இன்றி
வைக்கப்படும் பணயங்கள்
எந்தப் புரிதலுமற்று
இடப்படும் முத்தங்கள்
எந்த வெளிச்சமும் இன்றி
வரும் பகல்கள்
இன்னும் ஏராளமான
அந்தரமான காரியங்கள்
இந்த உலகத்தில்
நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன
அவன் ஒவ்வொன்றிற்கும்
பயந்தான்
ஒவ்வொன்றிலிருந்தும்
விலகினான்
எதையாவது
ஒன்றை சற்று நேரம்
பற்றிக் கொள்ள விரும்பினான்
உதாரணமாக
நகரப் பேருந்தில்
பதினைந்து நிமிடத்திற்கு
திட்டவட்டமாக அவனது இருக்கையை
படம் முடியும் வரை
திரையரங்கின் இருக்கையை
சுழற்சி நிற்கும் வரை
ஒரு ராட்டினத்தின் இருக்கையை
பந்தயம் முடியும் வரை
ஒரு விளையாட்டரங்கத்தின் இருக்கையை
நுழைவுச் சீட்டுகள் வழங்கப்படும்
எல்லா இடத்திலும்
ஒரு நியாயமான
ஏற்பாடு இருப்பதை
அவன் உணர்ந்திருந்தான்
மொத்த வாழ்க்கையும்
ஒரு வேசியர் விடுதி போன்றோ
கட்டணக் கழிப்பறைகள் போன்றோ
குறைந்தபட்ச உத்தரவாதங்களுடன்
இருந்திருந்தால்
இவ்வளவு பயப்பட வேண்டியதில்லை
என்று அவனுக்குத் தோன்றுகிறது
அவை
தெளிவாகத் தொடங்கி
தெளிவாக முடிவடைந்து விடுகின்றன
ஆனால் அவன்
திறந்த வெளி மைதானங்களிலும்
வீடுகளிலும்
படுக்கையறைகளிலும்
வகுப்பறைகளிலும்
பணியிடங்களிலும்
அவன் தன் அந்தர நிலையைத்
திரும்பத் திரும்பப்
பரிசோதிக்க வேண்டியவனாக இருக்கிறான்
ஒரு பறவை
காற்றில் எவ்வளவு அந்தரமாக இருக்கிறது
ஒரு நட்சத்திரம் ஆகாயத்தில்
எவ்வளவு
அந்தரமாக இருக்கிறது
ஒரு பிரபஞ்சத்தில்
ஒரு பூமி எவ்வளவு
அந்தரமாக இருக்கிறது
ஆனால்
ஒரு பூமியில்
ஒரு சின்னஞ்சிறு மனிதன்
இருப்பதுபோல
அவ்வளவு அந்தரமாக
எதுவுமே இருக்கமுடியாது
என்று நினைக்கும்போதே
அவன் தன் தலையைத்
தன் கைகளுக்குள்
அவ்வளவு ஆழமாகப்
புதைத்துக் கொள்கிறான்.
Mid-air
When he tries to say,
How
Unsupported I am,
His voice breaks.
There has not been a day
When he has not thought
To tell this
To someone
Atleast once
Truly,
Fully.
When he makes a metaphor
Of the floor
He stands upon
As a trapdoor on a gallows stage
Waiting to give way at any moment,
His eyes fill.
Going to meet men
Without any certainties,
Bets that are placed
Without any guarantees,
Kisses that are laid
Without any understanding,
Days that come
Without any light,
And many more
Unsupported things
Continue to happen
In this world.
He was afraid
Of each one of them.
He withdrew
From every one of them.
He wished to hold on
To something,
One thing for a while.
For example,
His seat, definitely,
For fifteen minutes
On the local bus,
His seat in the cinema
Until the film was over,
A seat in a giant wheel
Until it stopped spinning,
A seat in a stadium
Until the game was over.
He realised
A just
Arrangement existed
In all places
Where entry tickets are given.
If all of living
Was like a brothel
Or a paid toilet,
With their minimal guarantees,
He would not have to fear so much,
He thought.
They
Began clearly
And clearly ended.
Yet he lives
In open grounds,
And houses,
And beds,
And classrooms,
And workplaces,
As one who has repeatedly
Needed to test
His unsupported state.
How unsupported a bird is
Mid-air,
How
Unsupported
A star is in the heavens,
How unsupported
An Earth
Is in the universe,
But
When he thinks
That nothing
Can be
As unsupported
As a tiny little man
Upon an Earth
He buries his head
As deeply
In his hands.