அதன் மேலே நான்கு மழைத்துளிகள் அயர்ந்து கிடக்கின்றன
கண்ணாடி துகள்கள்
நீர் போர்வைகள்
ஒரு அபூர்வ புதிய தேசத்தின் நடைபாதையில்
ஒரு பழமையின் துகள்
Four raindrops lay tired upon it,
Drops of glass,
Blankets of water.
In a strange new land
A fragment of the old.
வெளிரிக்கிடந்த மதிய பொழுதில்
வண்ணம் மலர்ந்தது
சுற்றி இருக்கும் அமானுஷ்ய அமைதியின் நடுவில்
சில சத்தமில்லா குதுகூலங்கள்
Amid a blanched afternoon
Colour blossomed.
In the middle of an inhuman silence
Some soundless celebrations.
காய்ந்த இலைகளின் மண் நோக்கி விழும் அசைவு
அவற்றில் கால் படும் போது சரசரப்பு
மழை சொட்டும் இசை
The movement of dried leaves falling to the ground.
The rustle of feet encountering these.
The music of dripping rain.
தனிமையின் போர்வையை என்னை சுற்றி இழுத்துக் கொள்கிறேன்
அமைதியில் புது அர்த்தங்கள் கண்டு பிடிக்கிறேன்
என் விரல்கள் நடுவே புது எதிர்காலங்கள் தென்படும்
என்று எண்ணிய தருணத்தில்
இறந்தவற்றின் ஈர்ப்பு என்னை சுற்றி வளைக்கிறது.
I pull the blanket of solitude around me.
I find new meanings in silence.
And just when it seemed as if
New futures would become visible between my fingers,
The lure of dead things surrounds me.